/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/தங்க காயின் பெயரில் நூதன மோசடிமர்ம கும்பலை பிடிக்க தனிப்படைதங்க காயின் பெயரில் நூதன மோசடிமர்ம கும்பலை பிடிக்க தனிப்படை
தங்க காயின் பெயரில் நூதன மோசடிமர்ம கும்பலை பிடிக்க தனிப்படை
தங்க காயின் பெயரில் நூதன மோசடிமர்ம கும்பலை பிடிக்க தனிப்படை
தங்க காயின் பெயரில் நூதன மோசடிமர்ம கும்பலை பிடிக்க தனிப்படை
ராமநாதபுரம்:ராமநாதபுரத்தில் தங்க காயின் வழங்குவதாக கூறி நூதன மோசடி செய்து நகை மற்றும் பணத்தை அபகரித்தழ மர்ம கும்பலை பிடிக்க போலீஸ் தனிப்படை அமைக்கப் பட்டுள்ளது.
இவர் ராமநாதபுரத்தில் உறவினரை சந்தித்து விட்டு பஸ்சிற்காக சர்ச் ஸ்டாப்பில் நின்ற போது அடையாளம் தெரியாத நபர் பாண்டி கோயிலுக்கு பஸ் வருமா? என கேட்டவாறு காளிதாசை அணுகினார். பின் அவரை தொடர்ந்து மற்ற ஒருவர் வந்து அடையாளம் தெரியாத நபரிடம் நீங்கள் கூறியபடி நான் பணம் தருகிறேன் ,தங்க காயினை என்னிடம் தாருங்கள்'' என கூறி தங்க காயின் பறிமாற்றம் செய்வது போல் நடித்துள்ளனர்.
இதை பார்த்த காளிதாஸ் அவர்களிடம் என்ன விஷயம் என கேட்டுள்ளார். உடன் அடையாளம் தெரியாத நபர் காளிதாசிடம் மருத்துவ தேவைக்காக அவசரமாக தங்க காயினை விற்க வேண்டியுள்ளது. உங்களிடம் 50000 இருந்தால் கொடுங்கள் தலா பத்து கிராம் எடையுள்ள 24 காயினை தருகிறேன்'' என கூறியுள்ளார். தங்ககாயின் உண்மை தானா என சோதனையிட சாலை தெருவில் உள்ள ஒரு பெரிய நகை கடைக்கு அடையாளம் தெரியாத நபருடன் காளிதாஸ் சென்றார்.
இதில் உண்மையான தங்க காயின் ஒன்றை கொடுத்துள்ளனர். நகையை பரிசோதித்த போது காயின் தங்கம்தான் என உறுதியாகி உள்ளது. இதை நம்பி காளிதாஸ் உடனடியாக வங்கியிலிருந்து 50000 பணத்தை எடுத்து அடையாளம் தெரியாத நபரிடம் கொடுத்தபோது சற்று கூடுதலாக கொடுங் கள் என கேட்டவுடன் கையிலிருந்த 2000த்தையும் கொடுத்துள்ளார்.
அப்போது அடையாளம் தெரியாத நபரை நோக்கி வேறு ஒருவர் வந்து காயினுக்கு கூடுதலாக பணம் தருவதாகவும், இவரிடம் வாங்கிய பணத்தை திருப்பி கொடு'' என கூறியுள்ளார். உடன் காளிதாஸ் தன்னிடம் இருந்த ஒன்றரை பவுன் செயின், ஐந்து கிராம் மோதிரத்தையும் கழட்டி கொடுத்துள்ளார். அடையாளம் தெரியாதநபர் நகைகளை வாங்கி கொண்டு சரி இவருக்கே கொடுத்துவிடலாம்'' என கூறி 24 காயின்களையும் கொடுத்து விட்டு எஸ்கேப் ஆனார்.
காயின் கிடைத்த மகிழ்ச்சியில் காளிதாஸ் உறவினர் வீட்டிற்கு சென்று மீண்டும் காயினை சோதித்து பார்த்ததில் அவைகள் போலி என தெரியவந்தது. நூதன முறையில் தங்க காயின் மோசடி செய்யும் கும்பலை பிடிக்க பிரதீப்குமார் எஸ்.பி., உத்தரவின் படி பஜார் எஸ்.ஐ.,ராமநாதன் தலைமையில் தனிப்படை அமைக்கப் பட்டுள்ளது.
தனிப்படை எஸ்.ஐ., ராமநாதன் கூறுகையில்,நகை கடையில் உள்ள கேமராவில் பதிவாகியுள்ள போட்டோவை கொண்டு மதுரை, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த குற்றவாளிகளாக இருக்குமோ என விசாரித்து வருகிறோம்'' என்றார்.